இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34,973 பேருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது

Update: 2021-09-10 04:29 GMT
புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா 2-வது அலை பரவல் கணிசமாக குறைந்து வந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்றம் இறக்கம் கண்டு வருகிறது. 

இந்த நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 34 ஆயிரத்து 973 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. (கேரளாவில் மட்டும்
26,200
 பேர்) இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,31,74,954 ஆக அதிகரித்துள்ளது. 

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 260 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை  4,42,009 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 37,681 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,23,42,299 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நாடுமுழுவதும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,90,646 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தியாவில் இதுவரை 72,37,84,586 பேருக்கு (கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 67,58,491 பேர்) கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகள்