டெல்லியில் 30-க்கு கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

டெல்லியில் கடந்த 2 நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

Update: 2021-09-26 21:51 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் கடந்த ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்து வந்தது. அதனை தொடர்ந்து அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நோய்த்தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக, அங்கு படிப்படியாக கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது. அதிலும் குறிப்பாக கடந்த 2 நாட்களாக டெல்லியில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30-க்கும் கீழ் பதிவாகி உள்ளது.

அந்த வகையில் டெல்லி சுகாதாரத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, அங்கு கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் டெல்லியில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,38,714 ஆக உயர்ந்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25,085 ஆக உள்ளது. அதே சமயம் நேற்று ஒரே நாளில் 37 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். இதன் மூலம் டெல்லியில் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 14,13,258 ஆக அதிகரித்துள்ளது. தற்போது அங்கு 371 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்