டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவு
டெல்லியில் இதுவரை மொத்தம் 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன.
புதுடெல்லி,
நாட்டில் கொரோனா பாதிப்புகளின் தீவிரம் குறைந்து வரும் சூழலில் பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படுத்த கூடிய கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலையில், டெல்லியில் நடப்பு அக்டோபரில் மொத்தம் 139 டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் பதிவாகி உள்ளன. கடந்த செப்டம்பரில் 217 பாதிப்புகள் பதிவாகி இருந்தன.
இதனால் மொத்தம் டெல்லியில் இதுவரை 480 டெங்கு பாதிப்புகள் பதிவாகி உள்ளன. எனினும் இதனால் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை.