ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது: மோகன் பகவத்

காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடக்கும், புதிய அரசு அங்கு உருவாகும் என்று மோகன் பகவத் பேசினார்.

Update: 2021-10-17 06:23 GMT
நாக்பூர், 

நாக்பூரில்  நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியதாவது;- ஜம்மு காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து நீக்கப்படும் முன்பு காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி 80 சதவீதம் அரசியல்வாதிகளின் பைகளுக்கே சென்றது. மக்களுக்கு எந்தவிதமான பயனும் கிடைக்காமல் உள்ளூர் தலைவர்களை அனைத்தையும் அனுபவித்தார்கள்.

ஆனால், தற்போது ஜம்மு காஷ்மீரின் நிலைமை மாறியுள்ளது, மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்கிறார்கள். 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டபின், பயங்கரவாதிகளுக்கு  எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 
ஜம்மு காஷ்மீரில் வளர்ச்சிக்கான வழி பிறந்துள்ளது.  காஷ்மீரில் தேர்தல் விரைவில் நடக்கும், புதிய அரசு அங்கு உருவாகும்” என்றார். 

மேலும் செய்திகள்