ஸ்ரீநகரில் இருந்து சர்வதேச விமான சேவை விரைவில் தொடக்கம்

ஸ்ரீநகர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நேற்று நடத்தப்பட்டது.

Update: 2021-10-18 23:34 GMT
ஸ்ரீநகர்,

ஸ்ரீநகர் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து உலகின் பிற பகுதிகளுக்கு விமானங்களை இயக்குவது தொடர்பாக காஷ்மீர் மண்டல ஆணையர் பாண்டுரங்க் கே போலே தலைமையில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் ஸ்ரீநகர் விமானநிலையத்தில் இருந்து அக்டோபர் 23ம் தேதி முதல் சர்வதேச விமான சேவை தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தில் விமான சேவை தொடங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாகவும், கொரோனா காலகட்டத்தில் பயணிகள் மேலாண்மை தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. ஸ்ரீநகர் விமானநிலைய இயக்குநர், பயணிகள் விமானசேவைக்கான பிராந்திய இயக்குநர், காஷ்மீர் சுகாதார சேவை இயக்குநர், துணை ஆணையர் உள்ளிட்ட பல முக்கிய அதிகாரிகள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர்.

சர்வதேச விமான சேவையை தொடங்குவது தொடர்பாக ஸ்ரீநகர் விமானநிலைய இயக்குநர் விமான சேவைக்கான மாதிரி திட்டத்தை வெளியிட்டார்.விமான நிலைய செயல்பாடுகளை உன்னிப்பாக கவனிக்க வேண்டும் என்று மண்டல ஆணையர், அதிகாரிகளுக்கு  உத்தரவிட்டார். பயணிகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும், உள்நாட்டு, வெளிநாட்டு பயணிகளை தனித்தனியாக பிரித்து அனுப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அவர் வழங்கினார்.

மேலும் செய்திகள்