மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலம்

மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோவில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. மன்னர் கும்பத்தினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Update: 2021-10-19 19:51 GMT
மைசூரு:

சாமுண்டீஸ்வரி தேர்திருவிழா

  மைசூரு தசரா விழா கடந்த 15-ந்தேதி ஜம்பு சவாரி ஊர்வலத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. ஆண்தோறும் தசரா விழா முடிந்து சாமுண்டீ ஸ்வரி அம்மனுக்கு திருஷ்டி களிக்கும் வகையில் தேர்திருவிழா நடத்துவது வழக்கம். அதன்படி நேற்று சாமுண்டீஸ்வரி கோவில் வளாகத்தில் தேர்திருவிழா கோலாகலமாக நடந்தது. சாமுண்டீஸ்வரி அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்து மன்னர் குடும்பத்தினர் வழிப்பட்டனர். அதைதொடர்ந்து காலை சுபமுகூர்த்தத்தில் மன்னர் யதுவீர் சாமுண்டீஸ்வரி அம்மன் எழுந்தருளிய வெள்ளித்தேரின் வடத்தை பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார்.

  அதன்பிறகு கோவிலை சுற்றி பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேருக்கு முன்பு மன்னர் யதுவீர், அவரது குடும்பத்தினர் ராஜ உடை அணிந்து நடந்து சென்றனர். பின்னர் பாரம்பரிய முறைப்படி தேர்திருவிழா நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்திருவிழாவில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

காலை 10 மணி வரை...

  தேர்திருவிழாவையொட்டி அதிகாலை 4 மணி முதல் 10 மணி வரை பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. காலை 10 மணிக்கு மேல் கோவிலில் சாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

  இந்த விழாவில் எல்.நாகேந்திரா எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுனந்தா பாலநேத்ரா, கலெக்டர் பகாதி கவுதம், தாசில்தார், கோவில் நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்