‘பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு’ ஏற்பட்டது எப்படி? ஆய்வில் தகவல்

ஸ்ரீநகரில் 25 கோடி ஆண்டுகள் பழமையான புதைபடிவ களஞ்சியத்தில் ஆய்வு செய்வதற்காக ஒரு அகழ்வாராய்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.

Update: 2021-10-24 03:55 GMT
ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரில் உள்ள காண்மோஹ் பகுதியில்,  25 கோடி ஆண்டுகள் பழமையான “குரியுல் ரேவைன்” புதைபடிவ இடத்தை  ஆய்வு செய்ய நேற்று ஒரு அகழ்வாராய்ச்சி பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டது. சுமார் 25 கோடி ஆண்டுகளுக்கு முன்னர்  ஏற்பட்ட “பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு”  நிகழ்வினால் ஏற்பட்ட புதைபடிவ களஞ்சியத்தில் இந்த அகழ்வாராய்ச்சி  மேற்கொள்ளப்பட்டது.

இதுகுறித்து பேராசிரியர் ஜி எம் பாட் நேற்று கூறுகையில்,

இது ஒரு உலக பாரம்பரியம். இதனை பாதுகாப்பதற்காக சுமார் 20 ஆண்டுகளாக பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகின் மாபெரும் பேரழிவு என ஆராய்ச்சியாளர்களால் கருதப்படும் ‘பெர்மியன் ட்ரையாசிக் பேரழிவு’ ஏற்பட்டதன் காரணமாக,  95 சதவீதம் கடல்வாழ் உயிரினங்கள் அழிவுற்றன. மேற்கண்ட கடல்வாழ் மற்றும் தாவர உயிரினங்களின் பேரழிவு 25 கோடியே 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்தது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.

இவ்வாறு பேராசிரியர்   ஜி எம் பாட்  நேற்று தெரிவித்தார்.

மேலும் செய்திகள்