பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் பிரதமர் கொண்டாட வேண்டும் என மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

Update: 2021-10-25 03:14 GMT
புதுடெல்லி,

பெட்ரோல் விலை நாட்டின் அனைத்து பெரிய நகரங்களிலும் ரூ.100-ஐ கடந்து விட்டது. டீசல் விலையும் பல நகரங்களில் ரூ.100-ஐ எட்டி விட்டது. பெட்ரோல்-டீசல் மீது மாநில அரசுகள் விதிக்கும் வரியின் அடிப்படையில் மாநிலத்துக்கு மாநிலம் இவற்றின் விலை மாறுபடுகிறது.

இதற்கிடையே பெட்ரோல்-டீசல் விலை உயர்வு தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியுள்ளனர். மத்திய அரசு வரி கொள்ளையில் ஈடுபட்டு இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

இந்தநிலையில்  மத்திய முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டர் பதிவில், 

100 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதை அமைச்சர்களுடன் இணைந்து கொண்டாடும் பிரதமர் மோடி, பெட்ரோல், டீசல் விலை 100 ரூபாயை கடந்ததையும் கொண்டாட வேண்டும்.  சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை 1000 ரூபாயை தாண்டும் போது கொண்டாட மற்றொரு வாய்ப்பு இருக்கும் என பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்