மும்பை: பயணிகள் அதிகரிப்பால் உள்ளூர் ரயில்கள் சேவை அதிகரிப்பு

மும்பையில் உள்ளூர் ரயில்கள் முழு திறனுடன் தனது சேவையை அதிகரித்துள்ளது.

Update: 2021-10-26 04:41 GMT
கோப்புப்படம்
மும்பை,

மும்பையில் உள்ளூர் ரயில்களில் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், அம்மாநில ரயில்வேத்துறை கூடுதல் ரயில்களை இயக்க ஆலோசனை நடத்தியது.

மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் கூட்டறிக்கையின்படி, மும்பையில் உள்ளூர் ரயில் சேவைகள் அக்டோபர் 28, வியாழன் முதல் 100 சதவீதமாக அதிகரிக்க உள்ளது. 

இதுதொடர்பாக மத்திய ரயில்வேயின் தலைமை மக்கள் தொடர்பு அதிகாரி சிவாஜி சுதர் கூறுகையில், "உள்ளூர் ரயில்களில் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என்றார்.

நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்டதிலிருந்து ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. முதலாவதாக, ஆரம்ப ஊரடங்கின் போது ரயில் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது, அதன் பிறகு படிப்படியாக தனது சேவையை தொடங்கியது.  95 சதவீத திறனில் இயக்கி வந்த ரயில்வேயானது , இதனை தற்போது 100 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

மேலும் செய்திகள்