நீர்மூழ்கி கப்பல் தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி கைது

நீர்மூழ்கி கப்பல் தொடர்பான தகவல்களை கசியவிட்ட கடற்படை அதிகாரி உட்பட மூன்று பேரை சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

Update: 2021-10-26 21:27 GMT

புதுடெல்லி:


இந்திய கடற்படையில் உள்ள சிறப்பு வகை நீர்மூழ்கி கப்பலை நவீனப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இதுதொடர்பான தகவல்கள் கசிந்ததாக புகார் எழுந்தது. 
அதுபற்றி விசாரிக்க கடற்படை உயர் அதிகாரி தலைமையில் சிறப்பு குழு அமைக்கப்பட்டது.இந்த பிரச்னை தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகளும் விசாரணையை விரைவுபடுத்தினர். தற்போது பணியில் உள்ள கமாண்டர் பொறுப்பில் உள்ள கடற்படை அதிகாரிக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. 
இதனையடுத்து மும்பையில் பணியில் இருந்த கடற்படை அதிகாரி மற்றும் ஓய்வு பெற்ற இரு கடற்படை அதிகாரிகளை சி.பி.ஐ. நியமனம் செய்தது.  இவர்கள் வாயிலாக நீர்மூழ்கி கப்பல் தகவல் பகிர்வில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து சி.பி.ஐ. விசாரணை தொடர்கிறது.

இதற்கிடையே கடற்படை அதிகாரிகளை தங்கள் பக்கம் சாய்த்து, கப்பல்கள் மற்றும் நீர் மூழ்கி கப்பல்கள் குறித்த ரகசிய தகவல் சேகரிப்போர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.  இதன்படி 'வாட்ஸ் ஆப்' சமூக வலைதளம் வாயிலாக ரகசிய தகவல்களை அதிகாரிகளிடம் பெற்று பாகிஸ்தானுக்கு வழங்கியதாக அல்தாப் ஹுசைன் ஹருண் காஞ்சி என்பவரை குஜராத்தின் கோத்ராவில் போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்