மத்திய அரசுக்கு ஏழைகளை பற்றி அக்கறையில்லை: கபில் சிபல் விமர்சனம்

ஏழைகள் பற்றி பாஜகவுக்கு கவலை இல்லை எனவும் மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்வதாகவும் கபில் சிபல் கடுமையாக சாடியுள்ளார்.

Update: 2021-11-02 03:59 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான கபில் சிபல் ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: -  

பாஜக தலைவர்கள் உண்மையான உலகத்தில் இல்லை. அதன் காரணமாகவே ஏழைகளின் வருமானம் உயர்ந்து இருப்பதாக கூறி வருகின்றனர். ஒரு மாதத்திற்கு 6 ஆயிரம் சம்பாதித்த ஒருவர் தற்போது  மாதம் ரூ.25 ஆயிரம்  சம்பாதிப்பதாக  கூறியிருக்கிறார். இது மிகவும் கொடூரான ஜோக் - ஆகத்தான் பார்க்க முடியும். பாஜக மற்றும் அந்த கட்சி தலைவர்களின் வருமானம் மட்டுமே உயர்ந்து இருக்கிறது. பொதுமக்களின் வருமானம் உயரவில்லை. 

எரிபொருள் விலையும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையும் உயர்ந்து வருகிறது. ஏழைகள் பற்றி அவர்களுக்கு (பாஜக) கவலை இல்லை. மத அரசியல் மட்டுமே அவர்கள் செய்கின்றனர். இந்த அரசை மக்கள் தூக்கி எறிவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.  வர உள்ள உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் இருந்து இது துவங்கும்” என்றார். 

மேலும் செய்திகள்