மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறப்பு

மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரிகள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

Update: 2021-11-16 06:50 GMT
கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவலை முன்னிட்டு கடந்த ஆண்டு மார்ச்சில் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் மூடப்பட்டன.  இந்நிலையில், கொரோனா பாதிப்புகள் குறைந்த நிலையில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

இதன் ஒரு பகுதியாக மேற்கு வங்காளத்தில் 20 மாதங்களுக்கு பின் பள்ளி, கல்லூரி மற்றும் பல்கலை கழகங்கள் மீண்டும் இன்று திறக்கப்பட்டன.  9 முதல் 12 வரையிலான வகுப்புகளுக்கான பள்ளிகள், அனைத்து கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளையும் பின்பற்றி மீண்டும் இன்று திறக்கப்பட்டன.

இதன்படி, உடல்வெப்ப பரிசோதனை.  சேனிடைசர்கள், ஒரு பெஞ்சில் ஒரு மாணவர் அமர அனுமதி உள்ளிட்ட விதிகள் பின்பற்றப்படுகின்றன.  

மேலும் செய்திகள்