ராஜஸ்தானில் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை ராஜினாமா

நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது.

Update: 2021-11-20 15:33 GMT
ஜெய்பூர்,

ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல் மந்திரியாக அசோக் கெலாட் பதவி வகித்து வருகிறார். முதல் மந்திரியாக உள்ள அசோக் கெலாட்டிற்கும்  ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமாக அறியப்படும் சச்சின் பைலட்டிற்கு இடையே கருத்து வேறுபாடு  நிலவுவதாக கூறப்படுகிறது. 

எதிர்க்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு அமைச்சரவையில் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக  விமர்சித்து வரும் சச்சின் பைலட், அமைச்சரவையில் மாற்றம் வேண்டும் என நீண்டகாலமாக வலியுறுத்தி வருகிறார். 

இந்த நிலையில்,  அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்துள்ள 21 அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். நாளை அமைச்சரவை மாற்றி அமைப்பதற்கு ஏதுவாக அனைத்து அமைச்சர்களும் ராஜினாமா செய்துள்ளனர். 

காங்கிரஸ் கட்சி தலைமையுடன் அமைச்சரவை மாற்றம் தொடர்பாக ஆலோசனை நடைபெற்றுள்ள நிலையில்,  நாளை பதவியேற்கும் புதிய அமைச்சரவையில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் 12-க்கும் மேற்பட்டோருக்கு இடம் கிடைக்கும் எனக்கூறப்படுகிறது. 

மேலும் செய்திகள்