கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் - மத்திய அரசு
கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தீவிரமாக கண்காணிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.;
புதுடெல்லி,
கிரிப்டோ கரன்சி தொடர்பான பணப்பரிவர்த்தனைகளை தீவிரமாக கண்காணிக்க ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது எனவும் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்தியாவில் அங்கீகரிக்கப்படவில்லை எனவும் எனவே அது தொடர்பான பரிவர்த்தனைகள் தீவிரமாக கண்காணிக்கப்படும் என்று மக்களவையில் நிதி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.