‘ககன்யான்’ திட்டத்தின் பாராசூட் சோதனை வெற்றி - இஸ்ரோ அறிவிப்பு

விண்கலன் பாதுகாப்பாக தரையிரங்குவதை உறுதி செய்யும் வகையில் பாராசூட் சோதனை மேற்கொள்ளப்பட்டது.;

Update:2025-12-20 21:48 IST

சண்டிகர்,

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) கனவு திட்டம் மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம். இந்த திட்டத்தின்படி ஜி.எஸ்.எல்.வி மார்க்-3 ராக்கெட் மூலம் 3 இந்திய விண்வெளி வீரர்களை பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் உயரத்தில் இருக்கும் சுற்றுவட்டப்பாதைக்கு அனுப்பி, அவர்களைப் பாதுகாப்பாக மீண்டும் பூமிக்குத் திரும்ப அழைத்து வருவதுதான் நோக்கமாகும். இதனை வருகிற 2027-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டு உள்ளது.

இந்த நிலையில், ‘ககன்யான்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, விண்வெளிக்கு சென்று பூமி திரும்பும் வீரர்களின் விண்கலன் பாதுகாப்பாக தரையிரங்குவதை உறுதி செய்யும் வகையில் இன்று பாராசூட் சோதனை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. சண்டிகரில் உள்ள ஆர்.டி.ஆர்.எஸ். ஆய்வகம் மூலம் இந்த சோதனை செய்யப்பட்டதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.

விண்கலம் பூமியை நோக்கி இறங்கும்போது அதில் இணைக்கப்பட்டுள்ள 10 பாராசூட்கள், அடுத்தடுத்து விரிவடைந்து விண்கலத்தின் வேகத்தை சீராக குறைக்க உதவுகிறது. பாராசூட்டுகளின் உறுதித்தன்மைக்காக நடத்தப்பட்ட இரண்டு சோதனைகள் வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்