சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த கூலித்தொழிலாளி - அதிர்ச்சி சம்பவம்
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
லக்னோ,
பீகார் மாநிலம் ஷியோகர் மாவட்டத்தை சேர்ந்த 20 வயது இளைஞர் உத்தரபிரதேசத்தின் பாலியா மாவட்டம் கோட்வாலி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்தார். இந்நிலையில், கூலித்தொழிலாளியான இளைஞர் கோட்வாலி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளான்.
கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதி இந்த சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தையிடம் இம்மாதம் தெரிவித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை உடனடியாக போலீசில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த உ.பி. போலீசார், இளைஞரின் சொந்த ஊரான பீகாரின் ஷியோகர் மாவட்டத்திற்கு சென்றுள்ளனர். அங்கு வீட்டில் இருந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட கூலித்தொழிலாளி பின்னர் உத்தரபிரதேசம் அழைத்து வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞரின் பெயர் குறித்த விவரத்தை போலீசார் வெளியிடவில்லை.