ஆறுமுகசாமி ஆணைய வழக்கு: தீர்ப்பினை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு

ஜெயலலிதா மரணம் பற்றிய ஆறுமுகசாமி ஆணையத்திற்கு எதிராக அப்போலோ தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு ஒத்திவைத்தது.

Update: 2021-11-30 07:14 GMT
கோப்புப்படம்
சென்னை, 

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை கோரி அப்போலோ மருத்துவமனை தொடர்ந்த வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. 

கடந்த 25ஆம்தேதி நடைபெற்ற விசாரணையின்போது நீதிபதிகள், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகம் குறித்து விசாரிக்கும் நீதியரசர் ஆறுமுகசாமி ஆணையம் தொடர்ந்து செயல்படும் என்று கூறி அப்போலோவின் கோரிக்கையை நிராகரித்து உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி, உணவுக்கூடத்தின் அளவுகூட இல்லாத இடத்தில் ஆணையம் செயல்பட்டு வருகிறதா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியதுடன். இன்றைக்குள் (30 ஆம் தேதி) ஆணையம் செயல்பட மாற்று இடம் வழங்கவும் உத்தரவிட்டனர். மேலும், ஆறுமுகசாமி ஆணையத்துக்கு உதவ கூடுதலாக எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் நியமிக்கப்படுவர் என்று கூறி விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்திருந்தனர். 

இந்நிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஆணையத்தின் செயல்பாடு மற்றும் மருத்துவக்குழு உள்ளிட்டவை குறித்து விரிவான தீர்ப்பு வழங்கப்படும் என்று உறுதியளித்த நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

மேலும் செய்திகள்