பினராயி விஜயனின் மகள் திருமணம் குறித்து சர்ச்சை பேச்சு

கேரளாவில் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், முதல்-மந்திரி மகளின் திருமணம் குறித்து விமர்சிக்கும் வகையில் பேசியதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளாது.;

Update:2021-12-12 15:34 IST
திருவனந்தபுரம்,

கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனின் மகள் வீனாவுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இளம் தலைவரும், தற்போதைய பொதுப்பணித்துறை அமைச்சருமான முகமது ரியாஸ் என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. 

இந்த நிலையில் வக்பு வாரிய கூட்டத்தில் பேசிய முஸ்லிம் லீக் கட்சியின் மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், வீனா-ரியாஸ்க்கு நடந்தது திருமணமே அல்ல என்றார். கம்யூனிஸ்டுகள் இஸ்லாமிய வழியில் வாழவில்லை என்பன உள்ளிட்ட அவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது. 

இது குறித்து பரப்பனங்காடியைச் சேர்ந்த முஜீப் என்பவர் அளித்த புகாரின் பேரில், அவதூறு கருத்து மற்றும் மத வெறுப்பை தூண்டும் வகையில் பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அப்துல் ரஹ்மான் மீது கோழிக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

மேலும் செய்திகள்