6 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் ஓட்டுனருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை!

விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

Update: 2022-01-03 12:05 GMT
போபால்,

மத்தியபிரதேசத்தில் பன்னா பகுதியில் 6 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் 22 புலம்பெயர் தொழிலாளர்கள் பலியாகினர். அந்த வழக்கின் விசாரணையில் விபத்துக்கு காரணமான பேருந்து ஓட்டுனருக்கு 190 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து உள்ளூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அந்த தீர்ப்பில் 10 ஆண்டுகள் சிறை தண்டனையை 19 முறை  வழங்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது சற்று விசித்திரமாக உள்ளது. விபத்துக்கு காரணமான ஒரு ஓட்டுனர் இது போன்ற தண்டனையில் சிக்கியிருப்பது இதுவே முதல் முறை எனலாம்.

2015ம் ஆண்டு மே மாதம் 4ந்தேதி இந்த விபத்து நடந்தது. 65 பயணிகளுடன் சென்ற பேருந்து தண்ணீர் இல்லாத கால்வாய்க்குள் புகுந்தது. அதனால் பேருந்து தீ பற்றியது. அதில் 22 பேர் பலியாகினர். பலர் படுகயமடைந்தனர்.

பேருந்தில் அவசர கால வெளியேறும் வழி இரும்பு கம்பிகளால் அடைக்கப்பட்டிருந்தது. அதனால் பயணிகள் வெளியேற முடியாமல் சிரமப்பட்டனர்.

பேருந்து ஓட்டுனர் ஷாம்சுதீன்(47), பயணிகள் மெதுவாக வண்டியை ஓட்டும்படி கெஞ்சியும் காது கொடுத்து கேட்காமல் தறிகெட்டு ஓட்டியுள்ளார்.இதன் காரணமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கால்வாய்க்குள் புகுந்தது.

இந்த விபத்தின் வழக்கு, கோர்ட்டில் விசாரணை நிறைவுபெற்று கடந்த வெள்ளிக்கிழமை அன்று,  சிறப்பு நீதிபதி ஆர் பி சோன்கர் குற்றவாளிக்கு தீர்ப்பை வழங்கினார். அதில் 19 முறை 10 ஆண்டுகள் சிறை என தெளிவாக குறிப்பிட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்