சுப்ரீம் கோர்ட்டில் இதுவரை 13 நீதிபதிகளுக்கு கொரோனா - தலைமை நீதிபதி தகவல்

சுப்ரீம் கோர்டடின் 13 நீதிபதிகளும், 400 பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டதாக தலைமை நீதிபதி என்.வி. ரமணா தெரிவித்துள்ளார்.

Update: 2022-01-25 19:48 GMT
புதுடெல்லி,

தலைநகர் டெல்லியில் அண்மையில் அதிகரித்த கொரோனா பாதிப்பு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகளையும், பணியாளர்களையும் விட்டு வைக்கவில்லை. இந்த நிலையில் தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான அமர்வு முன் ஆஜரான வக்கீல் ஒருவர், வழக்கை அவசரமாக விசாரிக்க பதிவாளர் அலுவலகம் பட்டியலிடுவதில்லை எனவும் வழக்கை முன் கூட்டியே விசாரிக்குமாறும் கோரிக்கை விடுத்தார்.

அப்போது தலைமை நீதிபதி என்.வி. ரமணா, “சுப்ரீம் கோர்டடின் 13 நீதிபதிகளும், 400 பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். கொரோனா பாதிப்பால் உடல் ஒத்துழைக்க மறுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். புரிந்து கொள்ள வேண்டும்” என குறிப்பிட்டார். இதையடுத்து வக்கீல் நிலையை புரிந்து கொள்வதாக தெரிவித்தார்.

மேலும் செய்திகள்