நெட் தேர்வு முடிவுகள் ஓரிரு நாளில் வெளியாகும் - பல்கலைக்கழக மானியக்குழு

2020 டிசம்பர் மற்றும் 2021 ஜூன் ஆகிய நெட் தேர்வுகளின் முடிவுகள் இன்னும் ஓரிரு நாளில் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.

Update: 2022-02-16 09:52 GMT
புதுடெல்லி,

பல்கலைக்கழக மானியக்குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வாகும். இதில் தேர்ச்சி பெறுவதன் மூலம் தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப்பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். 

கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற இருந்த யுஜிசி-நெட் தேர்வு, கொரோனா பரவல் உள்ளிட்ட காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஜூன் 2021-ல் நடைபெற இருந்த நெட் தேர்வும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இந்த ஒரு தேர்வுகளும் சேர்த்து 2021 நவம்பர் 20-ந்தேதி முதல் 2022 ஜனவரி 5-ந்தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டன. 

இந்த தேர்வுகளின் முடிவுகள் கடந்த ஜனவரி மாத இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குறிப்பிட்ட தேதிகளில் தேர்வு முடிவுகள் வெளியாகாத நிலையில், இன்னும் ஓரிரு நாட்களில் தேர்வு முடிவுகள் இணையதளம் வாயிலாக வெளியிடப்படும் என்றும் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் பல்கலைக்கழக மானியக்குழு தெரிவித்துள்ளது. 

மேலும் செய்திகள்