மராட்டியத்தில் மருந்து நிறுவனத்தில் வாயு கசிவு: 4 பேர் பலி; 2 பேருக்கு தீவிர சிகிச்சை
வாயு கசிவால் மூச்சு திணறல் 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
புனே,
மராட்டியத்தின் பால்கர் மாவட்டத்தில் பொய்சார் என்ற தொழிற்சாலை அமைந்த பகுதியில் மருந்து நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், பிற்பகல் 3 மணியளவில் நிறுவனத்தின் ஒரு பிரிவில் இருந்து நைட்ரஜன் வாயு கசிவு ஏற்பட்டு உள்ளது.
இதனால், பணியாளர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட 6 பேர் உடனடியாக மீட்கப்பட்டு, சிகிச்சைக்காக உள்ளூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். எனினும், அவர்களில் 4 பேர் மாலை 6.15 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டனர். மற்ற 2 பேர் ஐ.சி.யு.வில் வைக்கப்பட்டு உள்ளனர். அவர்களுடைய நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது.
இதனை பால்கர் மாவட்டத்தின் பேரிடர் நிர்வாக பிரிவின் தலைவர் விவேகானந்த் கதம் உறுதி செய்துள்ளார். அவர்கள் 2 பேருக்கும் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.