வன்னியர் உள்ஒதுக்கீடு ரத்து தொடர்பான மனுக்கள்- தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி அறிவிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைத்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Update: 2022-02-23 11:36 GMT
புதுடெல்லி,

முந்தைய அ.தி.மு.க. அரசு வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டிற்கான சட்டத்தை சட்டசபையில் நிறைவேற்றி அரசாணை வெளியிட்டது. இதை எதிர்த்து வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கு விசாரணையின்போது உள்ஒதுக்கீடு அரசியல் அமைப்பிற்கு எதிரானது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்தது.

இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. பா.ம.க. சார்பிலும் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை திட்டமிட்டபடி பிப்ரவரி 15, 16-ம் தேதிகளில் நடைபெற்றது. 

இந்நிலையில், இந்த வழக்கு  சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்த நிலையில்  வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீதம் உள் இடஒதுக்கீடுக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தேதி அறிவிக்கப்படாமல் தீர்ப்பு ஒத்திவைத்து  சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்