பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதவி விலகுகிறாரா..? - ஐக்கிய ஜனதாதளம் விளக்கம்

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் பதவி விலகுகிறாரா என்பது குறித்து ஐக்கிய ஜனதாதளம் விளக்கம் அளித்துள்ளது.

Update: 2022-04-24 19:25 GMT
Image Courtesy: PTI
பாட்னா, 

பீகாரில், பா.ஜனதாவுடன் சேர்ந்து நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை, எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த ‘இப்தார்’ விருந்தில் நிதிஷ்குமார் கலந்து கொண்டார். அத்துடன், அதிகாரபூர்வ முதல்-மந்திரி இல்லத்தை காலி செய்து விட்டு, வேறு பங்களாவில் குடியேறினார். இதனால், அவர் முதல்-மந்திரி பதவியில் இருந்து விலகப்போவதாக யூகம் எழுந்துள்ளது.

இந்தநிலையில், இதுகுறித்து நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதாதளம் விளக்கம் அளித்துள்ளது. அக்கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ஜா கூறியதாவது:-

நிதிஷ்குமாரை முதல்-மந்திரி வேட்பாளராக அறிவித்து, 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி போட்டியிட்டது. 2025-ம் ஆண்டுவரை பதவியில் இருக்க மக்கள் தீர்ப்பு அளித்தனர். எனவே, 2025-ம் ஆண்டுவரை நிதிஷ்குமார் பதவியில் இருப்பார். அவர் பதவி விலகும் பேச்சுக்கே இடமில்லை.

மேலும் செய்திகள்