வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்ற 5 பேர் கைது

மங்களூருவில் வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்ற 5 பேர் கைது செய்யபட்டனர்.

Update: 2023-03-31 06:15 GMT

மங்களூரு-

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு டவுன் லால்பாக் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் தடை செய்யப்பட்ட சிகரெட்டுகள் விற்பனை செய்வதாக பர்கி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை செய்வது தெரியவந்தது. இதுதொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் அதேப்பகுதியை சேர்ந்த ரகமதுல்லா, சந்தோஷ், சிவானந்தா, அசன்ஷெரீப், இர்சாத் என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 273 சிகரெட் பண்டல்கள் போலீசார் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதுகுறித்து பர்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மங்களூருவில் கடந்த சில மாதங்களாக வெளிநாட்டு சிகரெட்டுகள் விற்பனை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்