விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல்

பெங்களூரு விமான நிலையத்தில் விமானத்தில் கடத்திய ரூ.60 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;

Update:2022-10-11 02:18 IST

பெங்களூரு:

பெங்களூரு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து ஒரு விமானம் வந்தது. அந்த விமானத்தில் தங்கம் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில் பயணிகளிடம் வருவாய் நுண்ணறிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். ஆனால் பயணிகளிடம் இருந்து எதுவும் சிக்கவில்லை. இதனால் விமானத்தில் ஏறி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது ஒரு இருக்கைக்கு அடியில் 1 கிலோ 100 கிராம் எடையுள்ள தங்க நகைகள் கிடந்தன. அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.60 லட்சம் ஆகும். அதிகாரிகள் சோதனை நடத்துவது பற்றி அறிந்ததும் தங்கத்தை கடத்தி வந்தவர் அதனை விமானத்தில் போட்டு சென்றது தெரியவந்து உள்ளது. தங்கம் கடத்தி வந்த பயணி யார் என்று அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்