அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவானது.!

தென் கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக் கடலில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகி உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2023-10-18 06:50 GMT

புதுடெல்லி,

தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதிகளில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறும் என்றும் பின்னர் வரும்  21 ஆம் தேதி மத்திய அரபிக் கடல் பகுதியில் இது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் எனவும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதனால் கேரள மாநிலத்தில் இன்று மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனிடையே, தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான கடல் பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால், வரும் 20 -ம் தேதி வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்