காசி தமிழ் சங்கமம் 4.0 - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்
சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.;
Image Courtesy : PTI
லக்னோ,
வாரணாசி - தமிழ்நாடு இடையேயான பழங்கால தொடர்புகளை புதுப்பிக்கவும், மீண்டும் உறுதிப்படுத்தவும், கொண்டாடவும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 4-வது ஆண்டாக காசி தமிழ் சங்கமம் 4.0 கடந்த 2-ந்தேதி வாரணாசியில் தொடங்கப்பட்டது. இதனை உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சி வரும் டிசம்பர் 17-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வாரணாசியில் தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் டிரோன் கேமராக்கள் மூலம் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
காசி தமிழ் சங்கமம் 4.0 நிகழ்ச்சியின் கருப்பொருள் "தமிழ் கற்போம் - தமிழ் கற்கலாம்" என்பதாகும். இது இந்நிகழ்வின் ஒருங்கிணைந்த அம்சமாக இருக்கும். அனைத்து இந்திய மொழிகளும் நமது மொழிகள் மற்றும் ஒரே பாரத குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் என்ற செய்தியைப் பரப்புவதற்காக இந்த கருப்பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர்.