தேர்தல் பணியில் அலட்சியம் காட்டும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

தேர்தல் பணியில் அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல் பறக்கும்படை அதிகாரி அஜய் ராபின் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.;

Update:2023-04-15 02:30 IST

கோலார் தங்கவயல்:-

தேர்தல் அதிகாரி ஆய்வு

கோலார் தங்கவயல் தொகுதியில் தேர்தல் பிரசாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் வழங்குவதை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். மேலும் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. வெளி மாவட்டங்களின், பிற தொகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் தீவிர சோதனைக்கு பின்னதே கோலார் தங்கவயலுக்குள் அனுமதிக்கப்படுகிறது.

இந்நிலையில் நேற்று கோலார் தங்கவயல் தொகுதிக்குட்பட்ட கெம்பாபுரா சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஜய் ராபின் சிங் திடீரென்று வந்து ஆய்வு ெசய்தார். அப்போது சோதனை சாவடியில் இருந்த அதிகாரிகளிடம் இதுவரை நடந்த சோதனைகள். எத்தனை வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. என்ெனன்ன பொருட்கள் பிடிப்பட்டுள்ளது ஆகிய விவரங்களை கேட்டறிந்தார்.

நடவடிக்கை எடுக்கப்படும்

இதையடுத்து நிருபர்களுக்கு பேட்டியளித்த தேர்தல் பறக்கும் படை அதிகாரி அஜய் ராபின் சிங் கூறியதாவது:- கோலார் தங்கவயலில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். பணம், பரிசு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தேர்தல் அதிகாரிகள் பணியாற்றவேண்டும். பணியில் யாரும் அலட்சியமாக இருக்க கூடாது. மீறி அலட்சியமாக செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் வாகனங்களை கண்காணிக்க கேமிராக்கள் பொறுத்தும்படி சோதனை சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்

ேளன். விரைவில் அந்த பணிகள் தொடங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்