விஜய்யை நான் சாதாரணமாக எடை போடவில்லை - அண்ணாமலை

தமிழ்நாட்டில் இருமுனை போட்டிதான் என அண்ணாமலை கூறியுள்ளார்.;

Update:2026-01-14 14:41 IST

டெல்லி,

டெல்லியில் தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-

தமிழ்நட்டில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, தவெக, நாதக என நான்கு முனை போட்டி இருக்கிறது. மற்றவர்களை சிறுமைப்படுத்தவில்லை. தேர்தல் நெருங்க நெருங்க திமுக, அதிமுக கூட்டணிகளுக்கு இடையிலான இருமுனை போட்டியாக களம் மாறும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

விஜய்யை நான் சாதாரணமாக எடை போடவில்லை. அவர் ஒரு சினிமா ஸ்டார். மாஸ் இருக்கிற ஸ்டார். தவெகவில் அண்ணன் செங்கோட்டையன் உட்பட பலர் இணைந்திருக்கிறார்கள். களத்தில் பார்க்கிறேன். தொண்டர்கள் பரபரப்பாக வேலை செய்கிறார்கள். 2026 தேர்தலில் திமுக வேண்டாம் என விஜய் நினைத்தால் யார் வேண்டும் என்பதை அவர் தெளிவாக கூற வேண்டும். எங்களுக்கும் அதிமுகவுக்கும் கொள்கை வேறுபாடு இருந்தாலும் திமுகை வீழ்த்த கூட்டணி வைத்துள்ளோம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்