நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு

நலத்திட்டங்களுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசத்தை நீட்டித்து பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.

Update: 2022-11-15 18:45 GMT

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பெங்களூரு மாநகராட்சியின் நலத்திட்டங்களின் கீழ் கண் பார்வையற்றவர்களுக்கு ஸ்மார்ட் ஊன்றுகோல், மடிக்கணினி, மூத்த குடிமக்களுக்கு சக்கர நாற்காலி உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். இதற்கான காலஅவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில் விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற டிசம்பர் மாதம் 15-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பெங்களூரு 'அம்ருதோத்சவ வீடு' திட்டத்தின் கீழ் அரசின் வீட்டு வசதி திட்டங்களில் விண்ணப்பித்து வீடு வாங்க தகுதியான பயனாளிகளுக்கு மாநகராட்சி உதவி செய்கிறது. மாநகராட்சி சார்பில் ரூ.5 லட்சம் வழங்கப்படுகிறது.

இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்தவர்கள் பெங்களூரு மாநகராட்சியின் https://welfare.bbmpgov.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பங்களை கட்டணம் இன்றி சமர்ப்பிக்கலாம் அல்லது பெங்களூரு ஒன் மையங்களில் கட்டணம் ரூ.30 செலுத்தி விண்ணப்பிக்க முடியும். அனைத்து இணை கமிஷனர் அலுவலகங்களிலும் உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் மூலமும் விண்ணப்பிக்க வசதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு மாநகராட்சி கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்