இந்திய-பூடான் எல்லையில் விபத்தில் சிக்கிய ராணுவ வாகனம்: அதிகாரி உயிரிழப்பு; 4 பேர் காயம்

இந்திய-பூடான் எல்லை பகுதியில் ராணுவ வாகனம் விபத்தில் சிக்கியதில் அதிகாரி ஒருவர் உயிரிழந்து உள்ளார். 4 பேர் காயமடைந்து உள்ளனர்.;

Update:2022-11-07 14:40 IST


கவுகாத்தி,


அசாமின் தமுல்பூர் நகரில் இந்தியா மற்றும் பூடான் நாடுகள் இடையேயான எல்லை அமைந்த பகுதியில் இந்திய ராணுவத்தின் வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில், அந்த வாகனம் திடீரென விபத்தில் சிக்கியுள்ளது. இதில் வாகனத்தில் பயணித்த ராணுவ அதிகாரி ஒருவர் பலத்த காயமடைந்து, உயிரிழந்து உள்ளார். இதுதவிர, 4 பேர் காயமடைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து, உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு ராணுவ தள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். தொடர்ந்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை கவுகாத்தி நகர பாதுகாப்பு துறை மக்கள் தொடர்பு அதிகாரி தெரிவித்து உள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்