ஜி.எஸ்.டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவாக அதிகரிப்பு

கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜி.எஸ்.டி வரி வசூல் இதுவரை இல்லாத அளவாக அதிகரித்துள்ளது.

Update: 2023-05-01 13:06 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் 2017-ம் ஆண்டு, ஜூலை 1-ந்தேதி முதல் ஜி.எஸ்.டி. என்னும் சரக்கு, சேவை வரி விதிப்பு முறை அமலில் உள்ளது. மாதம் தோறும் ஜி.எஸ்.டி வரி வசூல் என்ற விவரங்களை மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் கடந்த மாதத்தில் ஜி.எஸ்.ட் வரி வசூல் 1.84 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி. அமலான காலம்தொட்டு இதுதான் அதிகபட்ச வசூல் ஆகும். 

கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரலில் அதிகபட்சமாக ரூ.1,67 லட்சம் கோடி ஜி.எஸ்.டி வரி வசூலானது. அதைவிட ரூ.19,945 கூடுதலாக தற்போது வசூலாகி இருப்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஏப்ரலில் சி.ஜி.எஸ்.டி-ஆக ரூ.38,440 கோடியும், எஸ்.ஜி.எஸ்.டி-ஆக ரூ.47,412 கோடியும், ஐ.ஜி.எஸ்.டி.-ஆக ரூ.89,158 கோடியும், செஸ் வரியாக ரூ.12,025 கோடியும் வசூலாகி இருப்பதாக நிதி அமைச்சகம் தகவல் வெளியிட்டிருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்