பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

கோலாரில் பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு 11-ந்தேதி போராட்டம் நடத்துவதாக ஜனதாதளம்(எஸ்) கட்சி அறிவித்துள்ளது.;

Update:2023-09-04 00:15 IST

கோலார்

கோலார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அறிவிக்கப்படாத மின்தடை அமலில் இருந்து வருகிறது. தினமும் 8 மணி நேரம் மின்தடை செய்யப்படுவதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கோலாரில் நேற்று ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறுகையில், உத்தரவாத திட்டங்களை நிறைவேற்றுவதற்காக காங்கிரஸ் கட்சி மக்களை கஷ்டப்படுத்தி வருகிறது. சாமானிய மக்கள், விவசாயிகளின் பிரச்சினைகளை அரசு தீர்க்கவில்லை. வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதால், கோலாரில் அடிக்கடி மின்தடை செய்யப்படுகிறது

. இது கண்டிக்கத்தக்கது. அறிவிக்கப்படாத மின்தடையை கண்டித்து கோலார் பெஸ்காம் அலுவலகத்தை முற்றுகையிட்டு வருகிற 11-ந்தேதி ஜனதா தளம்(எஸ்) சார்பில் போராட்டம் நடத்தப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்