'இந்தியா' என்பதற்கு பதிலாக 'பாரதம்' என்ற பெயரை பயன்படுத்த வேண்டும் - ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்

அனைத்து துறைகளிலும் ‘பாரதம்’ என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும் என்று மோகன் பகவத் தெரிவித்தார்.;

Update:2023-09-02 23:47 IST

கவுகாத்தி,

அசாம் மாநிலம் கவுகாத்தி நகரில் சகல் ஜெயின் சமாஜ் அமைப்பு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

"நம் நாட்டின் பெயர் காலம் காலமாக 'பாரதம்' என்றே இருந்து வந்துள்ளது. எந்த மொழியாக இருந்தாலும் பெயர் மாறுவதில்லை. நமது நாடு பாரதம், எனவே 'இந்தியா' என்ற வார்த்தையை பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.

அனைத்து துறைகளிலும் 'பாரதம்' என்ற பெயரை பயன்படுத்தத் தொடங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் வரும். நம் நாட்டை பாரதம் என்று அழைத்து மற்றவர்களுக்கும் விளக்க வேண்டும். இன்று உலகிற்கு நாம் தேவை. நாம் இல்லாமல் உலகம் இயங்காது. யோகா மூலம் உலகை இணைத்துள்ளோம்."

இவ்வாறு மோகன் பகவத் பேசினார். 

Tags:    

மேலும் செய்திகள்