செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழப்பு

உத்தரகாண்ட் மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தார்.;

Update:2022-08-24 07:46 IST

உத்தரகாசி,

உத்தரகாண்ட் மாநிலத்தில் செல்பி எடுக்க முயன்றபோது ஆற்றில் தவறி விழுந்த 15 வயது சிறுவன் உயிரிழந்தார். ஜோஷியாரா அருகே இந்த சம்பவம் நடந்துள்ளது. பாமாங்கனில் வசிக்கும் மணிஷ் உனியால் என்ற 15 வயது சிறுவன் தனது மொபைல் போனில் செல்பி எடுக்க முயன்றபோது பாகீரதி ஆற்றில் தவறி விழுந்தார்.

இதையடுத்து மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் (SDRF) நீர்மூழ்கிக் குழுவினர் மணிஷை ஆற்றில் இருந்து காப்பாற்றினர். கரைக்கு கொண்டு வரப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த மணிஷை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்