விமான பயணங்களின்போது மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வது எளிமை ஆகிறது

விமான பயணங்களின்போது மின்னணு சாதனங்களை எடுத்துச் செல்வது எளிமை ஆகிறது.

Update: 2022-12-22 00:56 GMT

புதுடெல்லி,

விமான நிலையங்களில் சமீப காலமாக சோதனை நடவடிக்கைகளுக்காக பயணிகள் நீணட நேரம் காத்துக்கிடக்கிற நிலை உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்துக்கு புகார்கள் குவிந்தன. இதனால் விமான நிறுவனங்கள் கூடுதல் பணியாளர்களை நியமிக்க சமீபத்தில் உத்தரவிடப்பட்டது.

தற்போது மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை எடுத்துச்செல்கிறபோது, அவற்றை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்துவதால் சிரமங்களை சந்திக்க வேண்டி உள்ளது. இனி இந்த தொல்லை இருக்காது.

இனி விமான நிலையங்களில் 'கம்ப்யூட்டர் டோமோகிராபி' அடிப்டையிலான ஸ்கேனர்களை பயன்படுத்த வேண்டும் என்று சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகம் பரிந்துரை செய்துள்ளது. இது கையில் எடுத்துச் செல்கிற பெட்டிகளை, பைகளை முப்பரிமாண முறையில் 'ஸ்கேன்' செய்து காட்டி விடும் என்பதால், பயணிகள் மடிக்கணினி போன்ற மின்னணு சாதனங்களை சூட்கேஸ் அல்லது கைப்பையில் இருந்து வெளியே எடுக்க தேவை இருக்காது, இதனால் பயணிகளின் சிரமம் குறையும், நேரமும் மிஞ்சும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை சிவில் விமான போக்குவரத்து பாதுகாப்பு பணியகத்தின் இணை இயக்குனர் ஜெய்தீப் பிரசாத் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்