சங்கிலி தொடர் விபத்து; 4 பேர் படுகாயம்

சாகர் அருகே ஏற்பட்ட சங்கிலி தொடர் விபத்தில் 4 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Update: 2022-09-30 19:00 GMT

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா ஜோக் பகுதியை சோ்ந்தவர்கள் கிருஷ்ணமூா்த்தி, பாலகிருஷ்ணா, மது. இவர்கள் காரில் ஜோக் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் கூக்வே பகுதியில் சென்றபோது, ஒரு வளைவில் பெண் ஒருவர் காரின் குறுக்கே வந்துள்ளார். இதனை பார்த்த டிரைவர் காரை நிறுத்த முயன்றார்.

அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், தறிக்கெட்டு ஓடி எதிரே வந் மோட்டார் சைக்கிள் மீதும், தனியார் பஸ் மீதும் மோதி நின்றது. மேலும் காரின் அடிப்பகுதியில் மோட்டார் சைக்கிள் சிக்கி நாசமானது.

இந்த சங்கிலி தொடர் விபத்தில் காரில் வந்த கிருஷ்ணமூர்த்தி, பாலகிருஷ்ணா, மது மற்றும் மோட்டார் சைக்கிளில் வந்த ஸ்ரீதர் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை அந்தப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கார்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்