விசா முறைகேடு வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன் ஜாமீன் கோரி டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனு தாக்கல் செய்து இருந்தார்.

Update: 2022-06-03 11:11 GMT

புதுடெல்லி,

விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனுவை டெல்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருப்பது இந்த வழக்கில் அவருக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

விசா முறைகேடு வழக்கின் விவரம்

பஞ்சாபில் உள்ள ஒரு நிறுவனத்தின் பணிகளை முடிப்பதற்காக 263 சீனர்களுக்கு முறைகேடான முறையில் விசா வழங்கப்பட்ட விவகாரத்தில் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்பு இருப்பதாகக் கூறி சிபிஐ அவரிடம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதாக இருந்தால், முன்கூட்டியே தகவல் அளிக்க வேண்டும் என்று சிபிஐ நீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பு வழங்கி இருந்தது.

இந்நிலையில், அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் முன்ஜாமீன் கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு மீதான இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு இன்றைய தினத்திற்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டு இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்