சிவமொக்கா கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2023-03-31 06:15 GMT

சிவமொக்கா-

சட்டசபை தேர்தலையொட்டி சிவமொக்கா கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.

சட்டசபை தேர்தல்

கர்நாடகத்தில் சட்டசபை தேர்தல் மே மாதம் 10-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனே அமலுக்கு வந்தன. இந்தநிலையில் சிவமொக்கா கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், தேர்தல் அதிகாரிகள், போலீஸ் கமிஷனர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மிதுன் குமார், கூடுதல் மாவட்ட கலெக்டர் எஸ்.எஸ்.பீராதார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதற்கு கலெக்டர் செல்வமணி தலைமை தாங்கினார்.அப்போது கலெக்டர் பேசியதாவது:-

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் மே 10-ந்தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை 13-ந்தேதி எண்ணப்படுகிறது. வேட்பு மனு தாக்கல் ஏப்ரல் 13-ந் தேதி தொடங்குகிறது. சிவமொக்கா மாவட்டத்தில் 7 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த 7 தொகுதிகளிலும் மொத்தம் 14 லட்சத்து 58 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 22 ஆயிரத்து 80, பெண் வாக்காளர்கள் 7 லட்சத்து 36 ஆயிரத்து 574 பேரும், திருநங்கைகள் 26 பேரும் உள்ளனர். ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் ஆகும். இதில் 80 வயதை கடந்தவர்கள் 28, 680 பேரும், மாற்றுத்திறனாளிகள் 14,773 பேரும் உள்ளனர்.

வாக்குசாவடிகள்

சிவமொக்கா மாவட்டம் முழுவதும் மொத்தம் 1775 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை பொறுத்து கூடுதல் வாக்குசாவடிகள் அமைக்கப்படும். அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளன. சிவமொக்கா மாவட்டம் முழுவதும் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகளில் போலீசார் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினரும் சோதனையில் ஈடுபடுவார்கள். இவர்கள் 24 மணி நேரமும் சோதனையில் ஈடுபடுவார்கள்.

விளம்பர பலகைகள்

மாவட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகளுக்காக 8,520 ஊழியர்கள் நியமிக்கப்பட உள்ளன. தேர்தல் பணிக்கு ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணியில் ஈடுபட உள்ளனர். அனுமதியின்றி பொது இடங்களில் அரசியல் கட்சிகள் மாநில மற்றும் மத்திய மந்திரிகளின் புகைப்படங்கள், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பேனர் விளம்பரங்களை 24 மணி நேரத்திற்குள் அப்புறப்படுத்த வேண்டும். இதனை அப்புறபடுத்தா விட்டால் மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி அதற்கான செலவுகளை அந்தந்த கட்சிகளிடம் வசூலிக்கப்படும்.

வருகிற சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என கூறுபவர்களை அரசு அதிகாரிகள் சந்தித்து ஆலோசனை வழங்கி பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும். எந்த ஒரு பகுதியிலும் பிளக்ஸ் பேனர்கள் வைத்து தேர்தலில் வாக்களிக்க மாட்டோம், புறக்கணிப்போம் என்ற வார்த்தைகள் இருக்கக் கூடாது. அதை மீறி பேனர்கள் வைத்தால் அவர்கள் வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் செல்வமணி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்