உத்தரபிரதேசத்தில் அரசு வங்கியில் கள்ளநோட்டுகள் பறிமுதல்
ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.;
கோப்புப்படம்
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகரில் உள்ள அரசு வங்கி ஒன்றில் கள்ளரூபாய் நோட்டுகள் புழங்குவதாக புகார் எழுந்தன. அதன்பேரில் போலீசார் புகார் எழுந்த வங்கி கிளையில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வங்கி லாக்கரில் 27 போலி ரூபாய் நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கொடுத்த புகாரின் பேரில் கிளை மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடக்கிறது.