சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் இசை நிகழ்ச்சி - பாரம்பரிய இசையை கேட்டு மகிழ்ந்த பக்தர்கள்

சபரிமலை மஞ்சமாதா ஆலயத்தில் நடைபெற்ற வாத்திய இசை நிகழ்ச்சியை பக்தர்கள் ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.

Update: 2022-11-27 17:39 GMT

திருவனந்தபுரம்,

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டலகால பூஜை நடைபெற்று வருகிறது. சபரிமலை கோவிலுக்கு விரதம் இருந்து இருமுடி கட்டி ஐயப்பனை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். அவ்வாறு சபரிமலைக்கு வரும் பக்தர்கள் ஐயப்பனை தரிசித்து விட்டு, மஞ்சமாதா ஆலயத்திற்கு செல்வது வழக்கம்.

அதன்படி மஞ்சமாதாவை தரிசிக்கும் பக்தர்கள் மஞ்சள்பொடியை தூவியும், தேங்காய்களை உருட்டி விட்டும் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்கின்றனர். அந்தவகையில் வழிபாட்டின் ஒருபகுதியாக மஞ்சமாதா ஆலயத்தில் பாரம்பரிய வாத்தியங்களைக் கொண்டு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை பக்தர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டு மகிழ்ந்தனர்.


Full View


Tags:    

மேலும் செய்திகள்