முன்னாள் ராணுவ வீரரின் சூட்கேசுடன் ரூ.3½ லட்சம் தங்கநகைகள் திருட்டு

ஓடும் ரெயிலில் வைத்து முன்னாள் ராணுவ வீரரின் சூட்கேசுடன் ரூ.3½ லட்சம் தங்கநகைகள் திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Update: 2022-08-06 15:08 GMT

உப்பள்ளி;


தார்வார் டவுன் சரஸ்வதிபுரம் ரெட்டி காலனியில் வசித்து வருபவர் சந்திரசேகர் கவுடா. முன்னாள் ராணுவ வீரரான இவர், கலபுரகிக்கு ஒரு வேலை விஷயமாக சென்றிருந்தார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு கலபுரகியில் இருந்து சொந்த ஊருக்கு செல்ல ஐதராபாத் - உப்பள்ளி எக்ஸ்பிரஸ் ெரயிலில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அவர் தான் வைத்திருந்த சூட்கேசை, சீட்டுக்கு அடியில் வைத்துள்ளார். அந்த சூட்கேசில் தங்கநகைகள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் உள்ளிட்ட துணிமணிகள் வைத்துள்ளார். இதற்கிடையே சந்திரசேகர் கவுடா அசந்து தூங்கி கொண்டிருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட மர்மநபர்கள், சூட்கேசுடன் அதில் இருந்த தங்கநகைகள், பட்டுப்புடவைகளை திருடிக்கொண்டு சென்றுவிட்டனர்.

இதையடுத்து உப்பள்ளி ரெயில் நிலையம் வந்ததும் சந்திரசேகர் கவுடா, சூட்கேசை எடுக்க முயன்றுள்ளார். ஆனால் சூட்கேஸ் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது தான் அவருக்கு, மர்மநபர்கள் சூட்கேசுடன் தங்கநகைகள் ஆகியவற்றை திருடிச் சென்றதை உணர்ந்தார். அதில் 54 கிராம் தங்கநகைகள், விலையுயர்ந்த பட்டுப்புடவைகள் இருந்துள்ளது. இதன் மொத்த மதி்ப்பு ரூ.3.37 லட்சம் இருக்கும்.

இதுகுறித்து அவர், உப்பள்ளி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்