காஷ்மீர் படகு விபத்து: 6 பேர் உயிரிழப்பு

நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

Update: 2024-04-18 00:48 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள ஜீலம் ஆற்றில் நேற்று முன்தினம் 10-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளுடன் படகு சென்று கொண்டிருந்தது. கந்த்பால் நவ்கம் என்ற இடத்துக்கு அருகே சென்றபோது படகு திடீரென ஆற்றில் கவிழ்ந்தது.

இதனைடுத்து உடனடியாக மீட்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன. எனினும் இந்த விபத்தில் 6 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடி கொண்டிருந்த 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 3 பேர் மாயமாகினர். அவர்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்பு குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டன. எனினும் இரவு நேரம் ஆனதால் தேடுதல் பணி நிறுத்தப்பட்டது.

இந்த நிலையில் ஆற்றில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி நேற்று காலை மீண்டும் தொடங்கியது. மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுக்களுடன் இணைந்து காஷ்மீர் போலீசாரும் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் இந்திய கடற்படையின் மரைன் கமாண்டோ படையும் மாயமானவர்களை மீட்பதற்கு களத்தில் இறங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்