காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் அலுவலகம் முடக்கம் - தேசிய புலனாய்வு அமைப்பு அதிரடி
காஷ்மீரில் பிரிவினைவாத இயக்கத்தின் அலுவலகத்தை தேசிய புலனாய்வு அமைப்பு முடக்கம் செய்தது.;
கோப்புப்படம்
ஸ்ரீநகர்,
காஷ்மீர் பிரிவினைவாத இயக்கங்களில் ஒன்றான ஹூரியத் மாநாட்டின் அலுவலகம் ஸ்ரீநகருக்கு அருகே உள்ள ராஜ்பாக்கில் உள்ளது. இந்த அமைப்பின் தலைவர்களுக்கு எதிராக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கை விசாரித்து வரும் டெல்லி பாட்டியாலா கோர்ட்டு, ஹூரியத் மாநாடு அமைப்பின் அலுவலகத்தை முடக்க உத்தரவிட்டது.
இதைத்தொடர்ந்து ராஜ்பாக் பகுதியில் உள்ள அந்த அலுவலகத்துக்கு நேற்று அதிகாரிகள் சென்று இந்த நடவடிக்கையை எடுத்தனர். இது தொடர்பான அறிவிப்பை கட்டிடத்தின் வெளிப்புறச்சுவரில் அதிகாரிகள் ஒட்டினர்.
இந்த அலுவலகம் கடந்த 2019-ம் ஆண்டு முதல் மூடியே கிடப்பது குறிப்பிடத்தக்கது.