பாரத் ஜோடோ யாத்திரை: ராகுலுடன் நடைபயணம் மேற்கொண்ட காந்தியின் கொள்ளுப்பேரன்

ஷோகன் நகரில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

Update: 2022-11-18 08:46 GMT

மும்பை,

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இந்த யாத்திரை தற்போது மராட்டிய மாநிலத்தில் நடைபெற்று வருகிறது.

அகோலா மாவட்டத்தின் பாலாபூர் பகுதியில் இருந்து இன்று காலையில் தொடங்கிய பாரத் ஜோடோ ஷேகன் நகரை அடைந்தது. ஷோகன் நகரில் மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி யாத்திரையில் கலந்து கொண்டு ராகுல் காந்தியுடன் நடந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்