குஜராத்தில் நிலநடுக்கம் - ரிக்டர் 4.4 ஆக பதிவு
நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.;
காந்திநகர்,
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலநடுக்கத்தின் மையமானது தரைமட்டத்தில் இருந்து 10 கி.மீ. ஆழத்தில் அமைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் பதறியடித்துக் கொண்டு வீதிகளுக்கு ஓடி வந்தனர். இருப்பினும் நிலநடுக்கத்தால் பெரிய அளவிலான சேதம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.