மத்திய பிரதேசம்: கொலை முயற்சி வழக்கில் ஜாமீனில் வெளிவந்த கவுன்சிலரை பாலில் குளிப்பாட்டி வரவேற்பு

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் 22-வது வார்டில் ராஜூ பதோரியா வெற்றி பெற்றார்.;

Update:2022-08-25 23:01 IST

இந்தூர், 

மத்திய பிரதேசத்தின் இந்தூர் மாநகராட்சிக்கு கடந்த மாதம் நடந்த தேர்தலில் 22-வது வார்டில் ராஜூ பதோரியா வெற்றி பெற்றார். காங்கிரசை சேர்ந்த இவர், தேர்தலின்போது தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளர் சந்துராவ் ஷிண்டேவை கொல்ல முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இதில் கைது செய்யப்பட்டு உள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த பதோரியா, நேற்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். சிறையில் இருந்து வெளியே வந்த அவரை ஆதரவாளர்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்து ெசன்றனர்.

அத்துடன் பாலில் அவரை குளிப்பாட்டியும் தங்கள் மகிழ்ச்சியை வெளியிட்டனர். இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்