கொள்ளேகால் அருகே கிணற்றில் கால் தவறி விழுந்த பெண் சாவு
கொள்ளேகால் அருகே கிணற்றில் கால் தவறி விழுந்த பெண் இறந்தார்.;
கொள்ளேகால்-
சாம்ராஜ்நகர் மாவட்டம் கொள்ளேகால் தாலுகா வளகனகட்டி கிராமத்தை சேர்ந்தவர் கல்யாணி. இவரது வீட்டின் அருகே கிணறு ஒன்று உள்ளது. தினமும் கல்யாணி இந்த கிணற்றின் அருகே தனது மாடுகளை கட்டி வைப்பார்.
அதன்படி நேற்று முன்தினம் கிணற்றின் அருகே மாட்டை கட்டி கொண்டிருந்தார். அப்போது மாட்டை கட்டி வைத்திருந்த கயிறு தடுக்கி, கல்யாணி கிணற்றில் விழுந்துள்ளார்.
இதில் நீரில் மூழ்கி கல்யாணி உயிரிழந்தார். இந்தநிலையில் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், இதை பார்த்து கொள்ளேகால் புறநகர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கல்யாணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கொள்ளேகால் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.