சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கலைப்பு இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்
சிறுபான்மையினர் விவகார அமைச்சகம் கலைப்பு இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.;
கோப்புப்படம்
புதுடெல்லி,
மத்திய சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சகத்தை கலைத்து விட்டு அதனை, சமூகநீதி மற்றும் அதிகாரம் அளித்தல் துறையுடன் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அப்படி எந்த ஒரு திட்டமும் பரிசீலனையில் இல்லை என மத்திய அரசு நேற்று தெளிவுபடுத்தியுள்ளது.
பத்திரிகை தகவல் பணியகம் இதனை அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது. சிறுபான்மையினர் விவகாரங்கள் துறை மந்திரி ஸ்மிரிதி இரானியும் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.